இத்தாலியில் நேற்று 4.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இத்தாலியில் நேபல்ஸ் நகருக்கு அருகே எரிமலை ஒன்றில் 4.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நடுக்கத்தின் அதிர்வுகள் அந்த பகுதியில் உணரப்பட்டது. அதையடுத்து மக்கள் தங்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பொருள் இழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலநடுக்க மையப்பகுதிக்கு அருகே இருந்த பெண்கள் சிறையிலிருந்து அனைவரையும் அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.














