ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான காசா போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்..
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதுவரை 22,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இந்நிலையில் இந்த போரை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
முக்கிய நெடுஞ்சாலையில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளுடன் மக்கள் குவிந்தனர். பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்றும் இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும் பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். இதை அடுத்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.














