பெரில் புயல் தாக்கியதில் ஜமைக்கா நாட்டில் ஒன்பது பேர் பலியாகினர்.
அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரில் புயல் தோன்றியது. இது வெனிசுலா நாட்டையொட்டி புறப்பட்டு கரீபியன் தீவுகள் வழியாக மெக்ஸிகோவில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. அந்த நாடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. என்றபோதிலும் இந்த புயல் இந்த நாடுகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. ஜமைக்கா, வெண்ணிசுலா, பார்படாஸ் போன்ற நாடுகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அங்கு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு கடற்கரையொட்டி அமைந்த நகரங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். இந்த புயல் காரணமாக ஜமைக்காவில் ஒன்பது பேர் பலியாகினர். கிரேனடா தீவில் மூன்று பேர், வெனிசுலாவில் மூன்று பேர், செயின்ட் வின்சன்ட் மற்றும் கிரானைட்ஸ் தீவில் ஒருவர் பலியாகி உள்ளனர். இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்ற வருகிறது.














