அமெரிக்காவை தாக்கிய ஹெலீன் புயல் - 230 பேர் பலி

October 8, 2024

அமெரிக்காவில் ஹெலீன் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 230-ஆக அதிகரித்துள்ளது. கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கிய புயலாக உருமாறியது. புயல் வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து, ஃபுளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, மற்றும் ஜியாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அதற்கிடையில், புயலால் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகள், சாலைகள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் கைப்பேசி சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த […]

அமெரிக்காவில் ஹெலீன் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 230-ஆக அதிகரித்துள்ளது.

கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கிய புயலாக உருமாறியது. புயல் வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து, ஃபுளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, மற்றும் ஜியாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அதற்கிடையில், புயலால் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகள், சாலைகள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் கைப்பேசி சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை 225 உயிரிழப்புகள் இருந்த நிலையில், மேலும் இருவரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டதால் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்தது. இதற்கிடையில், 2005-ல் கட்ரினா புயலுக்குப் பிறகு, ஹெலீன் புயல் மிக மோசமானதாகக் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu