கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் காசா போரில், அண்மையில் ராபா நகரம் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் ஐநா பாதுகாப்பு துறையில் பணிபுரிந்து வந்த இந்தியர் கொல்லப்பட்டுள்ளார்.
ராஃபா நகர மக்களை கடந்த வாரத்தில் இஸ்ரேல் வெளியேறச் சொல்லியது. அதை தொடர்ந்து, அந்த நகரத்தில் கடும் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில், இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் பயணம் செய்த வாகனத்தின் மீது தாக்குதல் நடந்தது. தற்போதைய நிலையில் அவர் ஐநாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வருகிறார். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஐநா ஊழியர் கொல்லப்பட்டதற்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.