தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்கிறது ஹூண்டாய் 

கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் தமிழ்நாட்டில் மேலும் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தமிழ்நாட்டில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி மின்சார கார் அது சார்ந்த கட்டுமானம் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 15,000 கோடி ரூபாய் முதல் 20,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளது. இது தொடர்பான […]

கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் தமிழ்நாட்டில் மேலும் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தமிழ்நாட்டில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி மின்சார கார் அது சார்ந்த கட்டுமானம் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 15,000 கோடி ரூபாய் முதல் 20,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கும் ஹூண்டாய் அடுத்த 10 ஆண்டுகளில் 36.4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu