ஜெனரல் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையை கையகப்படுத்தும் ஹூண்டாய்

August 17, 2023

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை ஹூண்டாய் மோட்டார்ஸ் கையகப்படுத்த உள்ளது. உற்பத்தி ஆலை அமைந்துள்ள நிலம், கட்டுமானம், குறிப்பிட்ட சில கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை விற்கப்பட உள்ளன. இந்த ஆலையில், வரும் 2025 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெல்கான் ஆலையில், ஆண்டுக்கு 130000 வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். அந்த வகையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கையகப்படுத்தலாக இது […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை ஹூண்டாய் மோட்டார்ஸ் கையகப்படுத்த உள்ளது. உற்பத்தி ஆலை அமைந்துள்ள நிலம், கட்டுமானம், குறிப்பிட்ட சில கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை விற்கப்பட உள்ளன. இந்த ஆலையில், வரும் 2025 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெல்கான் ஆலையில், ஆண்டுக்கு 130000 வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். அந்த வகையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கையகப்படுத்தலாக இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் உற்பத்தி ஆலை கொண்டுள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு, இந்த கையகப்படுத்தல் மூலம் உற்பத்தியில் பன் மடங்கு உயர்வு ஏற்படும் என கூறப்படுகிறது. எனினும், ஆலை கையகப்படுத்தப்பட்ட விலை குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. மேலும், ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் இதுவரை பணியாற்றி வந்தவர்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu