8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் திட்டம்

March 14, 2023

8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப்-பில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. அதன்படி முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து, வந்தே பாரத் ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை ஐசிஎஃப்-பில் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில் […]

8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.

சென்னை ஐசிஎஃப்-பில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. அதன்படி முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

இதையடுத்து, வந்தே பாரத் ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை ஐசிஎஃப்-பில் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. தலா 16 பெட்டிகளைக் கொண்ட 46 வந்தே பாரத் ரயில்கள் அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட 92 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஐசிஎஃப்-க்கு ரயில்வே துறை அனுப்பியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu