ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 34.5% உயர்வு

January 23, 2023

ஐசிஐசிஐ வங்கியின் வரிக்குப் பின்னான லாபம் 34.5% உயர்ந்து, 8792 கோடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் விகிதம் கடந்த காலாண்டில் 44.6% ஆக பதிவாகியுள்ளது. மேலும், வங்கியின் கடன் பிரிவு, வருடாந்திர அடிப்படையில் 19.7% உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக, வங்கியின் உள்நாட்டு கடன் அளிப்பு 21.4% ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், வங்கியின் என்பிஏ (NPA) விகிதம் 0.55% ஆக சரிந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கிக்கு, […]

ஐசிஐசிஐ வங்கியின் வரிக்குப் பின்னான லாபம் 34.5% உயர்ந்து, 8792 கோடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் விகிதம் கடந்த காலாண்டில் 44.6% ஆக பதிவாகியுள்ளது. மேலும், வங்கியின் கடன் பிரிவு, வருடாந்திர அடிப்படையில் 19.7% உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக, வங்கியின் உள்நாட்டு கடன் அளிப்பு 21.4% ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், வங்கியின் என்பிஏ (NPA) விகிதம் 0.55% ஆக சரிந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கிக்கு, வட்டி மூலமாக கிடைத்துள்ள நிகர வருவாய் 34.6% உயர்ந்து, 16465 கோடியாக கடந்த காலாண்டில் பதிவாகியுள்ளது. மேலும், வட்டி அல்லாத இதர வருவாய் 1.8% உயர்ந்து, 4987 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வங்கி கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 3.7% உயர்ந்து, 4448 கோடியாக உள்ளது. அத்துடன், வங்கியின் கஜானாவிற்கு 36 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu