அண்மையில், அமெரிக்காவில் வீசிய இடாலியா சூறாவளி புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், வெள்ள நீரில் சதை உண்ணும் பாக்டீரியா உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ப்ளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதி மக்கள் இந்த பேரிடர் தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீரில் Vibrio vulnificus என்ற சதை உண்ணும் பாக்டீரியா வகை அடித்து வரப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா, நெக்ரோசிஸ், செப்சிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தக் கூடும். இந்த பாக்டீரியா, மனித உடலில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் பொழுது, வாதம் அல்லது இறப்பு ஏற்படலாம். தோலில் காணப்படும் சிறிய வெட்டுகள், புண்கள் மூலமாக பாக்டீரியா உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடனடி அறிகுறிகளாக, காய்ச்சல், தோல் சிவப்பாகுதல், அரிப்பு, வாந்தி, பேதி, மயக்கம், படபடப்பு போன்றவை ஏற்படலாம். - இவ்வாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.














