இந்தியாவின் தலைசிறந்த மற்றும் முன்னணி 10 வங்கிகள் பட்டியலில், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் முதல் முறையாக இடம் பிடித்துள்ளது. வங்கியின் மொத்த சந்தை மதிப்பு 66386.78 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கி ஆகியவற்றை ஐ டி எப் சி பின்னுக்குத் தள்ளி, எலைட் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இன்று ஐ டி எஃப் சி ஃபர்ஸ்ட் பேங்க் பங்குகள் ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளன. நிறுவனத்தின் ஒரு பங்கு 100 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டத்தட்ட 11% உயர்வாகும். ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்கில், ஜி க்யூ ஜி பார்ட்னர்ஸ் முதலீடு செய்ததை தொடர்ந்து, ஐடிஎப்சி மிக முக்கிய வங்கியாக கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தலைசிறந்த 10 வங்கிகள் பட்டியலில், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோட்டக் மஹிந்திரா, ஆக்சிஸ், பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ டி பி ஐ வங்கி ஆகியவை ஐ டி எப் சி க்கு முன்பாக இடம் வகிக்கின்றன.