சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால், சமையல் கியாசை மிகவும் மலிவான விலைக்கு விற்க முடியும் என்று நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய மந்திரி கூறினார்.
இதுகுறித்து பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறுகையில், நுகர்வோரின் தேவைகளை மத்திய அரசு உணர்ந்துள்ளது. சவுதி ஒப்பந்த விலை 330 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், உள்நாட்டில் மிகச்சிறிய அளவுக்குத்தான் விலையை உயர்த்தினோம். சவுதி ஒப்பந்தப்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை, தற்போது டன்னுக்கு 750 டாலராக உள்ளது. அதன் விலை குறைந்தால், உள்நாட்டில் சமையல் கியாசை இன்னும் மலிவான விலைக்கு விற்க முடியும் என்று அவர் கூறினார்.