கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகினால் முழுக்கட்டணம் ரிட்டர்ன் - யுஜிசி 

கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தருவது பற்றி பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும். அக்டோபர் 31 அல்லது அதற்கு முன் கல்லூரிகளில் இருந்து […]

கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தருவது பற்றி பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும். அக்டோபர் 31 அல்லது அதற்கு முன் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu