உள்நாட்டில் உருவாக்கப்பட்ட BharOS என்ற கைபேசி இயங்குதளம்

January 21, 2023

ஐஐடி மெட்ராஸில் கைபேசிகளுக்கான புதிய இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மொபைல் இயங்குதளம் இதுவாகும். BharOS என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இயங்குதளம் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BharOS இயங்குதளத்துடன் இணைந்தவாறு எந்தவித செயலியும் கொடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் சேர்த்து பல செயலிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பார் ஓ எஸ் இயங்கு தளத்தில் கைபேசியின் சேமிப்பு திறன் பாதுகாக்கப்படும் என கருதப்படுகிறது. JandK […]

ஐஐடி மெட்ராஸில் கைபேசிகளுக்கான புதிய இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மொபைல் இயங்குதளம் இதுவாகும். BharOS என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இயங்குதளம் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BharOS இயங்குதளத்துடன் இணைந்தவாறு எந்தவித செயலியும் கொடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் சேர்த்து பல செயலிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பார் ஓ எஸ் இயங்கு தளத்தில் கைபேசியின் சேமிப்பு திறன் பாதுகாக்கப்படும் என கருதப்படுகிறது.

JandK Operations Private Limited என்ற நிறுவனத்தின் உதவியுடன் ஐஐடி மெட்ராஸ் இதனை வடிவமைத்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த இயங்குதளத்தில் நோட்டா (NOTA) அப்டேட்டுகள் தானியங்கி முறையில் தரவிறக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனர்களின் நேரம் மிச்சமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu