உக்ரைன் நாட்டிற்கு, 15.6 பில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். நேற்று இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச அளவில் உக்ரைனுக்கு கிடைத்த 115 பில்லியன் டாலர்கள் நிதி உதவியின் பகுதி, உக்ரைன் நாட்டிற்கு வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, 2.7 பில்லியன் டாலர்கள் நிதி உடனடியாக வழங்கப்படுகிறது. மேலும், இந்த கடன் தொகைக்கு 4 ஆண்டுகள் முதிர்வு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போர் காரணமாக, உக்ரைன் நாட்டில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்நாட்டிற்கு உதவும் விதமாக, பல்வேறு உலக நாடுகள் நிதி வழங்கியுள்ளன. அதன் ஒரு பகுதி தற்போது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.