2023 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.8% ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. மேலும், 2024 ஆம் நிதி ஆண்டில் இது 6.1% ஆக குறையும் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுத்துறை நிதிகளை சரியாக நிர்வாகம் செய்வதால் ஜிடிபி வளர்ச்சி உயரலாம் எனத் தெரிவித்துள்ளது. இத்துடன், நிதி நிறுவனங்கள், வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவது நிலையான வளர்ச்சிக்கு துணை புரியும் என தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பல காரணிகளால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும். குறிப்பாக, உக்ரைனில் தீவிரமடையும் போர், உலகளாவிய முறையில் உணவு மற்றும் எரிசக்தி சந்தைகளை பாதிப்படையச் செய்யும். அதனால், வர்த்தகம் தடைபட்டு, நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நிலைத்தன்மை இல்லா சூழ்நிலை ஆகியவை ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. குறைவான வேகத்தில், சீரான முறையிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.