மாணவர்கள் ஒழுங்காக தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறையால் ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் உடல் நலத்திற்கும் கல்வி கவனத்திற்கும் பயனளிக்கிறது.
மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் “வாட்டர் பெல்” திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. உடல் நீரிழப்பால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், மாணவர்கள் தினமும் போதிய அளவு தண்ணீர் அருந்தும் பழக்கத்தை வளர்க்கவும் இது மேற்கொள்ளப்படுகிறது. காலை 11, மதியம் 1, மாலை 3 மணிக்கு தனிப்பட்ட ஒலி மூலம் 'வாட்டர் பெல்' அடிக்கப்படுகிறது. மாணவர்கள் வகுப்பிற்குள்ளேயே 2–3 நிமிடங்களில் தண்ணீர் அருந்த வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தண்ணீர் பாட்டிலை பள்ளிக்கு கட்டாயமாக கொண்டுவர வேண்டும் எனவும், தலைமையாசிரியர்கள் திட்டத்தை திட்டமிட்டு அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.














