பாகிஸ்தான்: இம்ரான் கான் கொலை முயற்சி - காவல்துறை விசாரணை நடத்த பஞ்சாப் மாகாண முதல்வர் உத்தரவு

November 4, 2022

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாடு தழுவிய பேரணியை நடத்தி வருகிறார். நேற்று இரவு வசீராபாத்தில் நடைபெற்ற பேரணியின் போது, அவரை கொல்ல முயற்சிகள் நடந்தது. துப்பாக்கியால் சுடப்பட்டதில், அவரது கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து, பிரத்தியேக கூட்டு விசாரணை குழு அமைத்து, முறையான விசாரணை நடத்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் பர்வேஸ் இலாஹி உத்தரவிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேரணியின் போது, 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாடு தழுவிய பேரணியை நடத்தி வருகிறார். நேற்று இரவு வசீராபாத்தில் நடைபெற்ற பேரணியின் போது, அவரை கொல்ல முயற்சிகள் நடந்தது. துப்பாக்கியால் சுடப்பட்டதில், அவரது கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து, பிரத்தியேக கூட்டு விசாரணை குழு அமைத்து, முறையான விசாரணை நடத்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் பர்வேஸ் இலாஹி உத்தரவிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேரணியின் போது, 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? அவர்களுக்கு பின்னால் யார் உள்ளார்கள்? இம்ரான் கானை கொலை செய்வதற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று
கூறினார்.

இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டவர், பேரணி நடந்த பகுதியிலேயே கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, அவர் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக அமைந்த வீடியோ பரவத் தொடங்கியது. காவல்துறை விசாரணையில் இருந்தபோது வீடியோ வெளியானதால், குறிப்பிட்ட காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து காவல் அதிகாரிகளையும் முதல்வர் பர்வேஸ் இலாஹி இடைநீக்கம் செய்துள்ளார். அதன் பிறகு, கூட்டு விசாரணை குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதனை பாக்கிஸ்தான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஷா முகமத் குரேஷி அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

இம்ரான் கானுக்கு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர். பைசல் சுல்தான், இம்ரான் கானின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், தோட்டாக்களின் சிறிய துண்டுகள் அவரது கால்களில் இருப்பது எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன்களில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவற்றை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த கொலை முயற்சி சம்பவத்தால் பேரணி தடைபட்டுள்ளது. இந்நிலையில், இன்சாப் ஸ்டூடண்ட்ஸ் ஃபெடரேஷன் அமைப்பு, “பேரணி நாளை காலை 11 மணிக்கு மீண்டும் தொடரப்படும்” என்று ட்விட்டரில் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu