இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் இடைக்கால ஜாமீன் நிராகரிப்பு

August 16, 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல், பயங்கரவாதம், தேச துரோகம், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் தோஷ்கானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்து, அந்த பணத்தை மோசடி […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல், பயங்கரவாதம், தேச துரோகம், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் தோஷ்கானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்து, அந்த பணத்தை மோசடி செய்ததற்காக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் அவரை ஐந்து ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், வன்முறை போராட்டங்கள் தொடர்பாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்பது ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் மூன்று ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. கூடுதல் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் ஆறு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இம்ரான் கானின் ஜாமீனை நீட்டிக்க முடியாது என்று நீதிபதி முகமது சோஹைல் கூறினார். மேலும் அவர் இம்ரான் கான் வழக்குகள் தொடர்பான விசாரணையில் சேர்ந்து கொள்வதுதான் நல்லது என்று குறிப்பிட்டார்.

அதோடு கருவூல பரிசுப் பொருட்களின் போலி ரசீது வழக்கில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் இடைக்கால ஜாமீன் செப்டம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu