பாகிஸ்தான் நாட்டின் பங்குச் சந்தை அலுவலக கட்டிடத்தில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று பாகிஸ்தான் பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இன்று காலை, இந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சுமார் 27 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய பாகிஸ்தானின் பி எஸ் எக்ஸ் பங்கு வர்த்தகம் விபத்து காரணமாக இன்று நிறுத்தப்பட்டுள்ளது.