தஞ்சையில் ரூ.20 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட காமராஜர் மார்க்கெட் திறப்பு

November 22, 2022

தஞ்சையில் ரூ.20 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட காமராஜர் மார்க்கெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தஞ்சையில் மிகப் பழமையான காமராஜர் மார்க்கெட் பழுதடைந்த நிலையில் இருந்தன. இதனை மாநகராட்சி நிர்வாகம் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் மறு உருவாக்கம் செய்துள்ளது. தற்போது 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன. மேலும் மழைநீர் வடிகால் வசதி, வாகனம் நிறுத்துமிடம், சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி, […]

தஞ்சையில் ரூ.20 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட காமராஜர் மார்க்கெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தஞ்சையில் மிகப் பழமையான காமராஜர் மார்க்கெட் பழுதடைந்த நிலையில் இருந்தன. இதனை மாநகராட்சி நிர்வாகம் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் மறு உருவாக்கம் செய்துள்ளது. தற்போது 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன.

மேலும் மழைநீர் வடிகால் வசதி, வாகனம் நிறுத்துமிடம், சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி, மின் வசதி, தீயணைப்பு வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய காமராஜர் மார்க்கெட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu