சென்னை காசாகிராண்ட் நிறுவனம் 1000 ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஸ்பெயின் பயணத்திற்கு அழைத்து செல்கிறது.
சமீபகாலமாக பல நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அவர்களின் பங்களிப்புக்கு முன்னிலை அளிக்கும் விதமாக பல ஊக்க பரிசுகளை வழங்கி வருகிறது. இந்த உழைப்பை மதிக்கும் விதமாக, சென்னை காசாகிராண்ட் நிறுவனமும் ஒரு ஊக்க திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன் "லாபம்-பங்கு பொனான்சா" திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் இலக்குகளை அடைய பெரும் பங்கு வகித்த 1,000 ஊழியர்களை ஸ்பெயினுக்கு அழைத்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் பார்சிலோனாவுக்கு 1 வாரமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2013 முதல் தொடர்ந்து வருகிறது, மேலும் பல நாடுகளில் ஊழியர்களை அழைத்துச் செல்வதன் மூலம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் இந்த திட்டம் தொடர்ந்தது, 2021-2023 ஆண்டுகளில் பல பிரபலமான இடங்களுக்கு ஊழியர்கள் செல்ல முடிந்தது.