கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக மேற்கொண்ட சிறப்பு பணிகளுக்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மாதம் தோறும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கட்டங்களாக தேர்வான ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு மாத மாதம் வங்கிகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பாக பணியாற்றிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளுக்கு தலா 50 பைசா என கணக்கிட்டு பணியாளர்களின் வங்கி கணக்கில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்பட உள்ளது.