சென்னை விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான சேவை அதிகரிப்பு

February 21, 2023

சென்னை விமான நிலையத்தில் இருந்து கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் சென்னை விமான நிலையத்தில் கோடை காலத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகளும் கோடை காலத்தில் குறைவாகவே இயக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால் சுமுக நிலை நிலவுகிறது. இதனால் […]

சென்னை விமான நிலையத்தில் இருந்து கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் சென்னை விமான நிலையத்தில் கோடை காலத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகளும் கோடை காலத்தில் குறைவாகவே இயக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால் சுமுக நிலை நிலவுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்காக மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாட்டு விமானங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருகின்றன. இதையடுத்து விமான நிறுவனங்கள், வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu