2024-ம் ஆண்டு நல்ல பருவமழை காரணமாக நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது சம்பா மற்றும் குறுவை அறுவடை நடைபெற்று வருகிறது. 2023-ம் ஆண்டு பருவமழையின் பாதிப்பால் உற்பத்தி குறைந்ததால், அரிசி விலை உயர்ந்தது. ஆனால், 2024-ம் ஆண்டு நல்ல பருவமழை காரணமாக நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் குறுவை அறுவடை முடிந்த நிலையில், சம்பா அறுவடை தொடங்கியுள்ளது, ஆனால் கடலூர் மற்றும் விழுப்புரம் போன்ற இடங்களில் கனமழை காரணமாக சில இடங்களில் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால் சம்பா விளைச்சல் சற்று குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலவரம் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் அமோகமாக இருந்தது, இதனால் நெல் விலை கடந்த ஆண்டு உயர்ந்த நிலையில், தற்போது 60 கிலோ நெல் மூட்டையின் விலை ரூ.1,400-க்கு இருந்து ரூ.1,500-க்கு குறைந்துள்ளது. இதனால், அடுத்த மாதம் அரிசி விலை குறைவுக்கு வாய்ப்பு உள்ளது.














