கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை பத்தாயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதில் நேற்று 2731 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 524 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கர்நாடகாவில் டெங்கு பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,000 யை தாண்டியுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக பெங்களூருவில் மட்டும் 270 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் டெங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.