நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ஆம் தேதி முழுமையாக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென கல்வித்துறை இயக்குனரகம் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து பள்ளிகள் வண்ணக் காகிதங்கள், மலர்கள் மூலம் வளங்கி, தேசியக்கொடியை கண்ணியம் தவறாமல் ஏற்றி விழா நடத்த வேண்டும். ஊராட்சி நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரையும் விழாவில் கலந்து கொள்ள அழைக்க வேண்டும். பிளாஸ்டிக் தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது; கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த நிலையில் ஏற்ற கூடாது என தெளிவான விதிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி விழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.














