சைபர் குற்றங்களில் ஈடுபடுவதற்காகவே தனியான ஸ்கைப் ஐடிக்களை உருவாக்கி, சைபர் குற்றவாளிகள் சிலர் பயன்படுத்தி வந்துள்ளனர். இது பற்றி விசாரித்து வந்த இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் 1000 க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிக்களை முடக்கி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் தளத்தை பயன்படுத்தி வீடியோ வழியில் சைபர் குற்றங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு வெளியில் இருந்து சில சைபர் குற்றவாளிகள் இதனை மேற்கொண்டதாக தகவல் வந்துள்ளது. இந்தியாவுக்குள்ளும் இது போன்ற சைபர் குற்றங்கள் அதிகமாக பதிவாகியுள்ளது. பொதுமக்களிடமிருந்து சைபர் குற்றங்கள் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், இதுபோன்ற குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகளை முடக்கி உள்ளனர். இந்த கணக்குகள் உடன் தொடர்புடைய வங்கி கணக்குகளையும் அடையாளம் கண்டு முடக்கி உள்ளனர்.