இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 52527 கோடி டாலராக சரிவு

February 13, 2023

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 57526.7 கோடி டாலராக சரிந்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 149.4 கோடி டாலர் சரிவாகும். 2023 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் அதிகரித்து வந்த கையிருப்பு, தற்போது குறையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 3ம் தேதி நிலவரப்படி, நாட்டின் சொத்து மதிப்பை மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நாணயங்கள் மதிப்பு 132.3 கோடி […]

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 57526.7 கோடி டாலராக சரிந்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 149.4 கோடி டாலர் சரிவாகும். 2023 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் அதிகரித்து வந்த கையிருப்பு, தற்போது குறையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 3ம் தேதி நிலவரப்படி, நாட்டின் சொத்து மதிப்பை மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நாணயங்கள் மதிப்பு 132.3 கோடி டாலர்கள் சரிந்து, 50769.5 கோடி டாலர்களாக உள்ளது. மேலும், நாட்டின் தங்கம் கையிருப்பு 24.6 கோடி டாலர்கள் குறைந்து 4378.1 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நிதிய சொத்துக்கள் (எஸ் டி ஆர்) 6.6 கோடி டாலர்கள் உயர்ந்து 1854.4 கோடி டாலர்களாகவும், சர்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு 90 லட்சம் டாலர்கள் உயர்ந்து, 524.7 கோடி டாலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu