மீண்டும் உச்சம் தொட்ட இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு

October 7, 2024

கடந்த வாரம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலராக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் 1,258.8 கோடி டாலர் அதிகம். இதில் பெரும்பகுதி அந்நிய நாணய சொத்துகளில் இருந்து கிடைத்துள்ளது. அத்துடன், தங்க கையிருப்பும் 218.4 கோடி டாலர் அதிகரித்து 6,579.6 கோடி டாலராக உள்ளது. கடந்த வாரத்தில், இந்தியாவின் சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) 80 லட்சம் டாலர் அதிகரித்து 1,854.7 கோடி டாலராக உள்ளது. மேலும், […]

கடந்த வாரம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலராக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் 1,258.8 கோடி டாலர் அதிகம். இதில் பெரும்பகுதி அந்நிய நாணய சொத்துகளில் இருந்து கிடைத்துள்ளது. அத்துடன், தங்க கையிருப்பும் 218.4 கோடி டாலர் அதிகரித்து 6,579.6 கோடி டாலராக உள்ளது. கடந்த வாரத்தில், இந்தியாவின் சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) 80 லட்சம் டாலர் அதிகரித்து 1,854.7 கோடி டாலராக உள்ளது. மேலும், சர்வதேச நிதியில் இந்தியாவின் கையிருப்பு 7.1 கோடி டாலர் குறைந்து 438.7 கோடி டாலராக உள்ளது.

இந்த அதிகரிப்புக்கு காரணம் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தது மற்றும் ரூபாயின் மதிப்பு உறுதியாக இருந்தது ஆகியவையாகும். இருப்பினும், உலகளாவிய பொருளாதார நிலைமை எப்போதும் மாறக்கூடியது என்பதால், ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu