உலக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
இதுபற்றி மத்திய அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் 2022-ம் ஆண்டில் டிஜிட்டல் வழி பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதன்படி, டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா, 8.95 கோடி பேர் (46 சதவீதம்) என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்து உள்ளது. இந்த பட்டியலில் 2.92 கோடி பேருடன் பிரேசில் 2-வது இடமும், 1.76 கோடி பேருடன் சீனா 3-வது இடமும், 1.65 கோடி பேருடன் தாய்லாந்து 4-வது இடமும், 80 லட்சம் பேருடன் தென்கொரியா 5-வது இடமும் பிடித்து உள்ளன என தெரிவித்து உள்ளது.