சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
மும்பைக் கடற்படைத் தளத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் , இந்தியக் கடற்படை, கடல்சார் பாதுகாப்பைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார வளர்ச்சியிலும் பங்காற்றுகிறது. இந்திய கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதே இந்தியக் கடற்படையின் முக்கிய இலக்காகும்.
எல்லைப்பகுதிகளையும், கடலோரப் பகுதிகளையும் பாதுகாக்கும் ஆயுதப்படையினர், தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடியப் பங்களிப்பின் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது என்று அவர் கூறினார்.