2023 ஆம் ஆண்டின் உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

February 23, 2023

2023 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% ஆக இருக்கும். இதுவே, அடுத்த நிதியாண்டில் 6.1% ஆக குறைய […]

2023 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% ஆக இருக்கும். இதுவே, அடுத்த நிதியாண்டில் 6.1% ஆக குறைய வாய்ப்புள்ளது. ஆனால், பிற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய சரிவு அல்ல. அத்துடன், 2023 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக இருக்கும். இதன் மூலம், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய இடத்தை தக்க வைத்துக் கொள்ளும். பல உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா சூழலிலும் சிறப்பான பொருளாதாரத் திட்டங்களை வகுத்து, இந்தியா சிறப்புடன் முன்னேறி வருவதாகக் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu