சர்வதேச ராணுவ செலவினத்தில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்தாண்டு ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கிய நாடுகளில் அமெரிக்கா ரூ.71 லட்சம் கோடி செலவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடத்தில் உள்ள சீனா ரூ.23 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. இது உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவில் 39 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் 3வது இடத்தில் உள்ள ரஷ்யா ரூ.7.06 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. ரஷ்யாவின் ராணுவச் செலவு கடந்த ஆண்டு 9.2 சதவீதமாக அதிகரித்து உள்ளது. 4வது இடத்தைப் பிடித்திருக்கும் இந்தியா, கடந்தாண்டு ரூ.6.6 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. இது 2021ம் ஆண்டைவிட 6 சதவீதம் அதிகமாகும். கடந்த 2013ம் ஆண்டை காட்டிலும் 47 சதவீதம் அதிகமாகும்.














