உலகளவில் ஏற்றுமதியில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம். இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ரூ.2 லட்சம் கோடி செலவானது. 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகளவில் ஏற்றுமதியில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலகிலேயே அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐதராபாத்தில் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்காக தனி நிறுவனம் உருவாக்கப்படும் என்று அவர் பேசினார்.