இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூசன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டார். இதில் உள்ள 47 உறுப்பினர்களில் 40 பேர் ஆதரவளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உறவினர் ஆக உள்ள சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக தான் தெரிவித்துள்ளார்