இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில், நேற்று ஒரே நாளில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4435 என்ற எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 23091 ஆக உயர்ந்துள்ளது. மேலும், செப்டம்பர் 25ஆம் தேதிக்கு பிறகு, தினசரி கொரோனா பாதிப்பு 4000 ஐ தாண்டி பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஓமைக்ரான் வைரஸ் திரிபுகளான பிஎஃப் 7 மற்றும் எக்ஸ்பிபி 1.16 ஆகியவையே அதிகமாக பரவுவதாக சொல்லப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று இந்தியாவின் […]

இந்தியாவில், நேற்று ஒரே நாளில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4435 என்ற எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 23091 ஆக உயர்ந்துள்ளது. மேலும், செப்டம்பர் 25ஆம் தேதிக்கு பிறகு, தினசரி கொரோனா பாதிப்பு 4000 ஐ தாண்டி பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஓமைக்ரான் வைரஸ் திரிபுகளான பிஎஃப் 7 மற்றும் எக்ஸ்பிபி 1.16 ஆகியவையே அதிகமாக பரவுவதாக சொல்லப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அன்று இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 3038 ஆகும். அதனுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் தினசரி பாதிப்பு 46% உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் தலா 4 பேரும், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். எனவே, மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 530916 ஆக உள்ளது. அதே வேளையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44179712 ஆக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu