பங்குச் சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு

கடந்த வார இறுதியில் கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்திலேயே ஏற்றத்துடன் தொடங்கிய சந்தை, இறுதியில், ஏற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 709.96 புள்ளிகள் அதிகரித்து, 61764.25 புள்ளிகளாக உள்ளது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 195.4 புள்ளிகள் உயர்ந்து, 18264.4 புள்ளிகள் ஆக நிலை கொண்டுள்ளது. […]

கடந்த வார இறுதியில் கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்திலேயே ஏற்றத்துடன் தொடங்கிய சந்தை, இறுதியில், ஏற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 709.96 புள்ளிகள் அதிகரித்து, 61764.25 புள்ளிகளாக உள்ளது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 195.4 புள்ளிகள் உயர்ந்து, 18264.4 புள்ளிகள் ஆக நிலை கொண்டுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், அதானி எண்டர்பிரைசஸ், கோல் இந்தியா லிமிடெட், சன் பார்மா, பிரிட்டானியா, நெஸ்லே, டாக்டர் ரெட்டிஸ், எல் அண்ட் டி நிறுவனங்கள் இழப்பை பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu