ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் ஒப்பந்தத்தில் இஸ்ரோ கையெழுத்திட்டு உள்ளது.
இஸ்ரோ, எஸ் எஸ் எல் வி - ஸ்மால் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கில் என்ற பெயரில் புதிய ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட் மூலம், ஆஸ்திரேலியாவின் 450 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் - என் எஸ் ஐ எல் கையெழுத்திட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்பேஸ் மெஷின்ஸ் கம்பெனி நிறுவனம் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இது பூமியிலிருந்து குறைந்த உயரத்தில், சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.