இந்தியா இலங்கை இடையே முதல் சொகுசு கப்பல் - சென்னையில் இருந்து அம்பாந்தோட்டை வந்தடைந்தது

June 8, 2023

முதல் முறையாக, இந்தியா மற்றும் இலங்கை இடையே ‘எம் எஸ் எம்ப்ரஸ்’ என்ற சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் வரையில் இதன் பயணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை, மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சென்னை துறைமுகத்தில் இந்த கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்தக் கப்பல், புதன்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்துள்ளது. இந்தக் கப்பலில் முதல் பயணத்தில் 1600 பயணிகளும், 600 கப்பல் […]

முதல் முறையாக, இந்தியா மற்றும் இலங்கை இடையே ‘எம் எஸ் எம்ப்ரஸ்’ என்ற சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் வரையில் இதன் பயணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை, மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சென்னை துறைமுகத்தில் இந்த கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்தக் கப்பல், புதன்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்துள்ளது. இந்தக் கப்பலில் முதல் பயணத்தில் 1600 பயணிகளும், 600 கப்பல் பணியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த 4 மாதங்களுக்கு இந்த சொகுசு கப்பலில் பயணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, இலங்கையின் அம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்கள் வழியாக, மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த கப்பல் போக்குவரத்து திட்டமிடப்பட்டுள்ளதால், 80000 க்கும் மேற்பட்ட பயணிகள் இதில் ஈடுபடுவார்கள் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu