இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமை வழங்குகிறது

April 18, 2023

ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 40,000 டன் கோதுமை வழங்கியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் 23 மில்லியன் உணவுப் பாதுகாப்பற்ற மக்களுக்கு ஐநா உலக உணவுத் திட்டத்தின் மூலம் உணவு ஏற்பாடு செய்தது. இந்நிலையில் தற்போது 5-வது தவணையாக 10 ஆயிரம் டன் கோதுமை சபஹர் துறைமுகம் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை மும்பையில் பாக்-ஆப்கான்-ஈரான் பிரிவின் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் […]

ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா 40,000 டன் கோதுமை வழங்கியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் 23 மில்லியன் உணவுப் பாதுகாப்பற்ற மக்களுக்கு ஐநா உலக உணவுத் திட்டத்தின் மூலம் உணவு ஏற்பாடு செய்தது. இந்நிலையில் தற்போது 5-வது தவணையாக 10 ஆயிரம் டன் கோதுமை சபஹர் துறைமுகம் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை மும்பையில் பாக்-ஆப்கான்-ஈரான் பிரிவின் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர் ஜேபி சிங் மற்றும் இந்தியாவின் உலக உணவுத் திட்டத்தின் இயக்குனரும் பிரதிநிதியுமான எலிசபெத் ஃபாரே ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.

பின்னர் பேசிய எலிசபெத் ஃபாரே கூறும்போது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு உதவி செய்ததற்காக இந்திய அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள். இந்தியாவின் ஆதரவு, தேவை உள்ள குடும்பங்களுக்கு உயிர்நாடியாக உள்ளது மற்றும் ஆப்கானிஸ்தான் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஐநா உலக உணவுத் திட்டத்தின் உதவியின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu