19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியினை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐசிசியின் 19-வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை தொடரது 2024 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜனவரி 18-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை நடைபெறும், இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முன்னாள் சாம்பியனான இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது, இதில் இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸும், இலங்கையும் […]

19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியினை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐசிசியின் 19-வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை தொடரது 2024 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜனவரி 18-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை நடைபெறும், இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முன்னாள் சாம்பியனான இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது, இதில் இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸும், இலங்கையும் உள்ளன.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக நிக்கி பிரசாத்தும், துணை கேப்டனாக சானிகா சால்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணி உள்பட, கமலினி ஜி, பவிகா அஹிரே ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர், மேலும் நந்தனா எஸ், ஐரா ஜே, அனாதி டி ஆகிய மூன்று காத்திருப்பு வீரர்களும் அணியில் உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu