கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு இந்தியா கனடாவை வலியுறுத்தி வருகிறது.காலிஸ்தான் அமைப்பின் தலைவர் கனடாவில் கொல்லப்பட்டதற்கும் இந்தியாவிற்கும் தொடர்புடையதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டி வந்தார். இதை இந்தியா முற்றிலுமாக மறுத்தது. மேலும் கனடா நாட்டில் இருந்த இந்திய தூதரை கனடா வெளியேற்றியது. இதற்கு எதிர்வினையாக இந்தியா கனடா தூதரக அதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் இந்தியா கனடா இடையே விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியா கனடா நாட்டிற்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் அக்டோபர் பத்தாம் தேதிக்குள் இந்தியாவில் இருக்கும் 62 தூதரக அதிகாரிகளில் 41 பேரை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் வெளியேற்றிய பின் பதவிகள், தூதரக பொறுப்புகள் நீக்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இந்தியா மற்றும் கனடா இதுவரை வெளியிடப்படவில்லை.