மேற்கு வங்கத்தில் இந்தியா - அமெரிக்க விமான பயிற்சி

மேற்கு வங்கத்தில் இந்த மாதம் இந்தியா - அமெரிக்க விமான படைகள் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்திய, அமெரிக்க விமானப் படைகளைச் சேர்ந்த பல்வேறு ரக விமானங்கள் இந்த கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்த பயிற்சி மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டா விமானப் படைத் தளத்தில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் ஜப்பான் விமானப் படை பார்வையாளராக மட்டும் கலந்துகொள்கிறது. இரு நாட்டு விமானப் படைகளின் சாகசம் […]

மேற்கு வங்கத்தில் இந்த மாதம் இந்தியா - அமெரிக்க விமான படைகள் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

இந்திய, அமெரிக்க விமானப் படைகளைச் சேர்ந்த பல்வேறு ரக விமானங்கள் இந்த கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்த பயிற்சி மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டா விமானப் படைத் தளத்தில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் ஜப்பான் விமானப் படை பார்வையாளராக மட்டும் கலந்துகொள்கிறது. இரு நாட்டு விமானப் படைகளின் சாகசம் மற்றும் போர்த்திறன்களை ஜப்பான் விமானப் படையினர் பார்வையிட்டு பயிற்சி பெறவுள்ளனர்.

கலைகுண்டா மட்டுமல்லாமல் பனகர், ஆக்ரா, ஹிண்டன் விமானப் படைத் தளங்களில் இருந்தும் விமானங்கள் புறப்பட்டு பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்திய விமானப் படையில் ரஃபேல், சுகோய்-30 எம்கேஐ, தேஜாஸ், சி-17 குளோப்மாஸ்டர்-3, ஐஎல்-78 போன்ற விமானங்களும், அமெரிக்காவின் சார்பில் எஃப்-15 ரக ஈகிள் ஜெட் விமானங்களும் பயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu