இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – பியூஷ் கோயல் தலைமையிலான குழு அமெரிக்கா பயணம்

September 22, 2025

H-1B விசா கட்டண உயர்வு, வரி பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து நாளை அமெரிக்காவில் பேச்சுவார்த்தை. இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நாளை (செப்டம்பர் 22) அமெரிக்கா செல்ல உள்ளது. இந்த பயணத்தின் போது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக, H-1B விசா கட்டணத்தை 100,000 டாலர் வரை உயர்த்தும் […]

H-1B விசா கட்டண உயர்வு, வரி பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து நாளை அமெரிக்காவில் பேச்சுவார்த்தை.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நாளை (செப்டம்பர் 22) அமெரிக்கா செல்ல உள்ளது. இந்த பயணத்தின் போது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக, H-1B விசா கட்டணத்தை 100,000 டாலர் வரை உயர்த்தும் அமெரிக்காவின் முடிவு இந்திய தொழில்நுட்பத் துறைக்கு பெரிய சவாலாக மாறும் நிலையில், அதனை குறைக்க இந்தியா வலியுறுத்த உள்ளது. அதேபோல், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக தடைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி, விரைவில் சாதகமான ஒப்பந்தத்தை எட்டுவதாகும். கடந்த வாரம், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தை குழு இந்திய அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து பேசியது. அந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக இருந்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாகவே பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu