காசாவில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துவதற்கு ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடைபெற்று வரும் போரில், இதுவரை 18000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், காசா நகரம் முழுமையாக ஒரு உருக்குலைந்துள்ளதாக கூறப்படுகிறது. காசா நகரில் வசிக்கும் 80% மக்கள் வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது. அத்துடன், பல்வேறு போர் குற்றங்களும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆதரவில் பின்னடைவு காணப்படுகிறது. மேலும், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக மொத்தம் 153 நாடுகள் வாக்களித்துள்ளன.














