அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் ரஹ்மான் மக்கியை ஏற்கெனவே இந்தியா , அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.














