ஆசிய விளையாட்டு விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.நாட்டின் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங் சேவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா , பிரவீன் ஓஜஸ் ஆகியோர் 159 - 158 என்ற புள்ளி கணக்கில் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா தங்கபதக்கத்தை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்தியா மொத்தம் 71 பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவு இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில் அதிக பதக்கங்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.