இந்திய அரசு, நடைமுறையில் உள்ள ஸ்டீலுக்கான ஏற்றுமதி வரியைத் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 58 சதவீதத்துக்கும் குறைவான இரும்பை கொண்ட பொருட்களுக்கு ஏற்றுமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்த்ராசைட், கோக்கிங் கோல், செமி கோக், கோக் மற்றும் பெர்ரோ நிக்கல் ஆகியவற்றுக்கு இருந்த ஏற்றுமதி வரிச் சலுகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இன்று முதல் புதிய வரி அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
குறிப்பாக, HS 7201, 7208, 7209, 7210, 7213, 7214, 7219, 7222 மற்றும் 7227 ஆகியவற்றுக்கு வரிகள் இல்லை. ஆந்த்ராசைட், கோக்கிங் கோல் மற்றும் பெர்ரோ நிக்கல் ஆகியவற்றுக்கு 2.5 சதவீதமும், கோக் மற்றும் செமி கோக் ஆகியவற்றுக்கு 5 சதவீதமும் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தியாளர்கள் பயனடைவர் என்றும் ஏற்றுமதி உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.