இந்திய வங்கிகள் தொடர்ந்து வலிமையாக உள்ளன என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்புகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை உள்ள போதிலும், 2023ல் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஆசியா-பசுபிக் நாடுகள் 70 சதவீத பங்கினை வகிக்கும் என்றும், உலகின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 15 சதவீத பங்களிப்பை வழங்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
உலகளாவிய உறுதியற்ற நிலைகளுக்கு இடையில், இந்திய வங்கி அமைப்பு நிலையானதாக உள்ளது. வலுவான மூலதனம், வலுவான பணப்புழக்க நிலை, பாதுகாப்பான கடன் அளிக்கும் நடைமுறை, மேம்பட்ட லாபம் ஆகியவற்றுடன் இந்திய வங்கி அமைப்பு நிலையானதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.














